கோவை வடபுதூரில் அரசுக்கு சொந்தமான பாறையை உடைக்க மலசர் இன மக்கள் எதிர்ப்பு - நூதன போராட்டம்

வடபுதூரில் அரசுக்கு சொந்தமான மணியரசன் பாறை உடைக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கோவில் இருப்பதால் உடைக்க எதிர்ப்பு தெரிவித்து பாறை மீது ஏறி அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவுஅருகே வடபுதூர் பகுதியில் அரசு புறம்போக்கில் 7.5 ஏக்கர் பரப்பளவில் மணியரசன் பாறை உள்ளது.

இந்த பாறையின் உச்சியில் இந்து மலசர் இனமக்கள் மணியரசி அம்மனை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவில் இந்து மலசர் இன மக்கள் குலதெய்வமாக விளங்கி வருகிறது.

இந்த கோவில் அமைந்துள்ள பாறையை இரண்டு நபர்கள் குத்தகைக்கு எடுத்து பாறையை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாறையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து, மலசர் இன மக்கள் பாறை மீது ஏறிதிறந்த வெளியில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மலசர் இன மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தற்போது மணியரசன் பாறையின் பெரும்பாலான பகுதியில் கற்கள் உடைத்து எடுக்கப்பட்டு உள்ளதால் தற்போது மலசர் இன மக்கள் வணங்கும் கோவில் அந்தரத்தில் உள்ளது.

இந்த பாறை மீது உள்ள மணியரசி சாமி பேரை சொல்லி மலசர் இன மக்கள் சாதி சான்றிதழ் வாங்கி வருவதாகவும், பாறை மீது உள்ள சாமியை தரிசனம் செய்ய வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...