வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் யானைகளின் அட்டகாசம் - கடையை உடைத்து சூரையாடியது

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பு.


கோவை : வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் அதிகளவு நடமாட்டத்தால் மக்கள் எப்போதும் அச்சத்தில் உள்ளனர்.



வால்பாறை அருகேகூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருவதை அறிந்த வால்பாறை வியாபாரிகள் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகளை உருவாக்கி அப்பகுதியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நேற்று இரவு ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்த யானையொன்று கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் இருநத செல்வராஜ் என்பவரின் கடையை உடைத்து உணவுப் பொருட்கள்மற்றும் பழங்கள் போன்றவை சாப்பிட்டு கடையை சேதப்படுத்தியுள்ளது.



அதிகாலையில் அப்பகுதி வழியாக பேருந்துகள் வருவதை அறிந்த காட்டு யானை கூழாங்கல் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது.

ஆற்றுப்பகுதியில் கடைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...