கடந்த 22 ஆம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், தடை செய்யப்பட்ட PFI அமைப்பின் உறுப்பினராக இருந்த வஹிதுர் ரஹ்மான் (25) என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கோவை: கடந்த 22 ஆம் தேதி கோவை பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.
இச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நபர்கள் மீது ஆணையரின் உத்தரவுப்படி தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து வருகிறது.
அதன்படி, கடந்த 22 ஆம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த வஹிதுர்
ரஹ்மான் (25)என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டம் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, சிறையில் உள்ள அவரிடம் காவல்துறையினர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது குறித்த உத்தரவு நகலை வழங்கினர்.
முன்னதாக, சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட மாநகர அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சதாம் உசேன் (32) மற்றும் அகமது சிகாபுதீன் (24), கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 22 ஆம் தேதி ஒப்பணக்காரர் வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவாளர் பாஷா மற்றும் 23 ஆம் தேதி குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஹிந்து முன்னணி பிரமுகர் கார் மீது பெட்ரோல் வீசி பற்ற வைத்த எஸ்.டி.பி. ஐ கட்சி நிர்வாகி ஜேசுராஜ் மீதுதேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
ஏற்கனவே இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களிடமும் உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.