கோவை போத்தனூர் அருகே ரயில் மோதி எருமை மாடு உயிரிழந்த சோகம்..!

போத்தனூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எருமை மாட்டின் மீது கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே எருமை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.


கோவை: கோவை - மதுரை இடையே விரைவு ரயில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் கோவை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலானது பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

இதனிடையே அந்த ரயிலானது, போத்தனூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் வந்து அங்கிருந்து கிளம்பியது. இந்நிலையில் மேட்டூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற எருமை மாட்டின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.



இதில், எருமை மாடு,ரயிலின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார், சக்கரத்தில் சிக்கிய எருமை மாட்டின் உடலை மீட்டனர்.

இதன் காரணமாக கோவை - மதுரை இடையே செல்லும் விரைவு ரயில் சுமார் 15 நிமிடத்திற்கும் மேல் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு, மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றது.



2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில், தற்போது, எருமை மாடு உயிரிழந்த சம்பவம் வன உயிரியல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வனவிலங்குகள் ரயில்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் மேலும், நிகழாமல் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...