கோவையில் சான்றிதழ் வழங்க ரூ.5000 லஞ்சம் பெற்ற குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் இருவர் கைது - லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை.

கோவையில் காப்பகத்தில் உள்ள குழந்தையை வீட்டுக்கு அனுப்ப சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தனது குழந்தையை அழைத்துச் செல்ல ஒரு குழந்தையின் பெற்றோர்,விண்ணப்பித்து உள்ளனர்.

அப்போது, அதற்கான சான்றிதழை வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை புகார்தாரரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட நபர்களிடம் கொடுக்க சொல்லி அனுப்பியுள்ளனர்.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்ற பெற்றோர்,குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமிடம் ரூ.5,000 கொடுத்துள்ளனர்.



அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர். மேலும்,தனலட்சுமி மற்றும் சட்ட உதவியாளர் கார்த்திக் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

காப்பகத்தில் இருந்து குழந்தையை அழைத்துச் செல்ல ரூ.5,000 லஞ்சம் வாங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...