கோவை மேற்கு மண்டல பகுதிகளில்‌ நடைபெறும் தூய்மை பணிகளை மாவட்ட ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு.!

பி.என்‌.புதூர்‌, வீராசாமி காலனி, ராதிகா அவென்யூ ஆகிய பகுதியில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நில அளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகரமைப்பு அலுவலருக்கு மாவட்ட ஆணையாளர்‌ உத்தரவு.!


கோவை: மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 41-க்குட்பட்ட பி.என்‌.புதார்‌, வீராசாமி காலனியில்‌ உள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகள்‌, பிறப்பு இறப்பு பதிவேடு, புகார்‌ பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

வீராசாமி காலனி, ராதிகா அவென்பூ ஆகிய பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்,



அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்தொடர்ந்து, பி.என்‌.புதூர்‌, வீராசாமி காலனி, ராதிகா அவென்யு, ஆகிய பகுதியில்‌ மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌ வீடுவீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவதையும்‌, தேவையில்லாத பொருட்களை அகற்றும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதையும்‌, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் அப்பகுதியில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நில அளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறுமாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல தலைவா்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்‌ சாந்தி, உதவி ஆணையாளர்‌ சேகர்,உதவி செயற்பொறியாளர்‌ . ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலா்‌ கலாவதி, சுகாதார அலுவலர்‌ பரமசிவம்‌, உதவி பொறியாளார்கள்‌ரவிக்கண்ணன்‌, முரளிதரன்‌, சுகாதார ஆய்வாளா்‌ ராஜேந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தார்கள்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...