கோவை தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: மேலும் இருவர் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம் - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவு

ஒப்பணக்கார வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய தடைசெய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த பாஷா மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பெட்ரோல் வீசிய எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி ஜேசுராஜ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: கடந்த 22 ஆம் தேதி கோவை பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.

இச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட மாநகர அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சதாம் உசேன் (32) மற்றும் அகமது சிகாபுதீன் (24), கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 22 ஆம் தேதி ஒப்பணக்காரர் வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவாளர் பாஷா மற்றும் 23 ஆம் தேதி குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஹிந்து முன்னணி பிரமுகர் கார் மீது பெட்ரோல் வீசி பற்ற வைத்த எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி ஜேசுராஜ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

ஏற்கனவே இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, உத்தரவு நகல் இன்று மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...