பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற கொ.ம.தே.க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

கோவை பொள்ளாச்சி - உடுமலை சாலையில் நடைபெற்ற கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும், தேங்காயை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள தீரன் அரங்கத்தில் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்னை விவசாயத்தை முதன்மையாக கொண்ட கோவை மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி, தென்னை நார் உற்பத்தி பாதிப்பு, தென்னை மரங்களை தாக்கும் நோய் தாக்குதல்கள், பால் விலை உயர்வு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்பட்டன.



இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை தெற்கு மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் பேசியதாவது, மத்திய அரசு பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும்.

நம் நாட்டிலேயே தேங்காய் உற்பத்தி அதிக அளவில் இருக்கும் பொழுது, கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் தேங்காய் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்

தென்னை சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், கூட இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பல பொருட்கள் இந்தியாவிற்கு வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் இயக்க முடியாத நிலை உள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால் கொள்முதல் விலையை 2019ஆண்டு அரசு உயர்த்தியது. அதன் பிறகு தீவனம், இடுபொருள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பால் உற்பத்தி தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே லிட்டருக்கு 40 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

நுகர்வோர்களை பாதிக்காமல் மானிய விலையில் அரசு விநியோகம் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் உரித்த தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

தென்னை மரங்களில் தாக்கியுள்ள வெள்ளை ஈக்கள் தாக்குதல், கேரளா வாடல் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...