கோவையில் வீட்டு உரிமையாளரின் மகனே மாற்று சாவி போட்டு வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் கொள்ளை..!

செல்வபுரம் அருகே தீபாவளி போனஸ் மற்றும் சம்பளத்தை வீட்டில் வைத்து விட்டு வேலைக்கு சென்ற குடியிருந்த பெண்ணின் வீட்டில் மாற்று சாவி போட்டு திறந்து பணத்தை திருடிய வீட்டின் உரிமையாளர் மகன் அசோக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: செல்வபுரம் சண்முக ராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 29) . டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் பவித்ரா வேலை செய்யும் நிறுவனத்தில் தீபாவளி போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் பணத்தை பவித்ரா வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.

நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த போனஸ் பணம் ரூ 15 ஆயிரத்தை காணவில்லை. ஆனால் வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்படவில்லை. பணம் மட்டுமே காணாமல் போயிருப்பதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பவித்ரா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரை பதிவு செய்த செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சின்னராஜ், பவித்ரா வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையின் அடிப்படையில் முருகேசனின் மகனான அசோக்குமார் (43) மாற்று சாவி போட்டு பவித்ரா வீட்டை திறந்து பணத்தை திருடியதாக தெரியவந்தது.

பவித்ரா வேலைக்கு சென்ற பிறகு அசோக் குமார் வீட்டில் இருந்த மாற்று சாவியை போட்டு வீட்டை திறந்து பணத்தை திருடியதாக தெரியவந்தது. புலன் விசாரணையில் ஈடுபட்ட போலிஸார் அசோக் குமாரை கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...