20 நிமிட மழைக்கே தத்தளிக்கும் கோவை: மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

கோவை காந்திபுரம், உக்கடம், ரயில் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இன்று பிற்பகல் கனமழை பெய்த நிலையில், மாநகராட்சி பொது சுகாதார அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.



இந்நிலையில், கோவை காந்திபுரம், உக்கடம், ரயில் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.



வெறும் 20 நிமிடம் பெய்த மழைக்கே, காந்திபுரம், சித்தாபுதூர், வி.கே.கே மேனன் சாலை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பொது சுகாதார அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.



தண்ணீரை வெளியேற்றாமல் அந்த பகுதிகளில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனிடையே, மழைக்காலம் தீவிரம் அடைவதற்குள் மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால்களை தூர்வாரி வேண்டும் மற்றும் மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...