கோவை ரேஸ் கோர்ஸ் ஓட்டலில் தகராறு: பா.ஜ.க சிறுபான்மை பிரிவு நிர்வாகி மற்றும் அவரது மகனை தாக்கியதாக பாஜக இளைஞரணி நிர்வாகி கைது

கோவை மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு தலைவரான ஜான்சன் மற்றும் அவரது மகனை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து தாக்கியதாக, அங்கு பணியாற்றிய பவுன்சரும், பாஜக இளைஞரணி நிர்வாகியான ரெயின்போ ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட பா.ஜ.க-வில் சிறுபான்மையினர் பிரிவு தலைவராக இருப்பவர் ஜான்சன். இவர், கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தனது மகன் டேவிட் உடன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பாபீஸ் நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு 10:30 மணிக்கு சென்றுள்ளார்.

தனது மகன் பிறந்தநாள் விழாவுக்கு, அரங்கை முன் பதிவு செய்வதற்காக சென்ற இருவரும், 2500 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, அரங்கை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், அரங்கில் ஏற்கனவே தம்பதிகள் மட்டுமே பங்கேற்கும் நடன நிகழ்ச்சி (Couples Night) நடப்பதால், அனுமதிக்க முடியாது என்று ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜான்சன், அவரது மகன் டேவிட்டை, ஹோட்டலில் பாதுகாப்புக்கு இருந்த பவுன்சர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இருதரப்பினரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதில் டேவிட்டின் பல் உடைந்தது. மேலும், அவர் அணிந்திருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜான்சன் மற்றும் டேவிட்டை தாக்கியதாக, ஹோட்டல் அக்கவுன்டன்ட் விஷ்ணு பாரதி, பவுன்சர்கள் ரெயின்போ ரமேஷ், பில்லா ரமேஷ், சுதர்சன், முகமது அப்ரிதீன் ஆகியோர் மீது, 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரெயின்போ ரமேஷ், போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இவர், கோவை மாவட்ட பா.ஜ.க இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...