கோவை வாளையாறு அருகே ரயில் மோதி பெண் யானை உயிரிழந்த சோகம் - வனத்துறை தீவிர விசாரணை

கோவை - கேரளா எல்லையான வாளையாறு அருகே இன்று அதிகாலை விரைவு ரயில் மோதி 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த நிலையில், உடன் வந்த குட்டி யானை காயங்களுடன் உயிர் தப்பியது.


கோவை: தமிழ்நாடு - கேரளா இடையே கோவை வழியாக தினமும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மதுக்கரை - வாளையாறு வரை சுமார் 12 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேரும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையான வாளையாறு அருகே ரயில் மோதியது 3 யானைகள் உயிரிழந்தது.

இதனை அடுத்து யானைகளின்நடமாடத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் ரயில் பாதைகளில்கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலி எழுப்பி ஆகியவற்றை பொருத்த முடிவு செய்யப்பட்டு, அவை பொருத்தப்பட்டன.

இந்நிலையில் கேரள மாநிலம் வாளையார் -கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் நேற்று இரவு 17 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனஇதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்த யானை கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது.



அப்போது கன்னியாகுமரியில் இருந்து அசாமை நோக்கி விவேக் விரைவுரயில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் தண்டவாளத்தை கடக்கமுயன்ற சுமார் 20வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது ரயில் மோதியது.



இதில் பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது. மேலும் பெண் யானையுடன் வந்த குட்டி யானை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இதுகுறித்து ரயில்வே துறையினருக்கும் வனத்துறையினருக்கும் ரயில் ஓட்டுனர்கள் தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றினர். மேலும், ரயில் மோதியது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் அதிவேகமாக இயக்கப்பட்டதா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...