ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் காலதாமதம் ஏற்றுக் கொள்ள முடியாதது - திருப்பூரில் அமைச்சர் மு பெ. சாமிநாதன்

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி அமைச்சர், தோண்டப்பட்ட சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் இருந்தால், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அவற்றை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தந்த ஒப்பந்ததாரர்களிடம் உடனுக்குடன் அழுத்தம் கொடுத்து பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் காலதாமதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒப்பந்ததாரர்களை ஆணையாளர் நேரில் வரவழைத்து தாமதத்திற்கான காரணங்களை கேட்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எள்ளளவும் காலதாமதம் ஏற்றுக் கொள்ள முடியாதது.

பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனுக்குடன் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல, பல்வேறு இடங்களில் தெருவிளக்கு எரிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட ஆட்சியர் வினீத், மண்டல தலைவர்கள், மண்டல அலுவலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...