கோவை மற்றும் திருப்பூர் புறநகர் பகுதிகளில் நடந்த விபத்துகளில் இருவர் பலி; மழையால் பைக் டயர் வழுக்கி பலியான துயரம்

அவிநாசி சாலை மற்றும் உடுமலை அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் கராத்தே மணி (வயது 42). இவர் அவிநாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜே.சி.பி. ஒன்று இவரது இருசக்கர வாகன்ம் மீது மோதியதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் மாதையன் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக, திருப்பூர் பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த ஜே.சி.பி.டிரைவர் முருகேசன் என்பவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மெட்ராத்தி பகுதியில் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளி, மணி (வயது 33).

இவர் நேற்று பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மழை பெய்ததால், அவரது பைக் சக்கரம் வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி புஷ்பா கோமங்கலம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...