குப்பையை கொட்டிவிட்டு நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், ஆவலப்பம்பட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு காணியாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி பார்வதி (68).
கடந்த 6ஆம் தேதி மாலை வீட்டின் எதிரே உள்ள குப்பை தொட்டியில் குப்பையை கொட்டி விட்டு நின்று கொண்டிருந்தவர் மீது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி பார்வதியை மீட்ட உறவினர்கள் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி வந்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார் விபத்தை ஏற்படுத்திய பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.