கோவை கே.ஜி.சாவடி அருகே கேரட் லோடு ஏற்றி வந்த பிக்கப் வேன் அடுத்தடுத்து 3 மின் கம்பங்கள் மீது மோதி விபத்து…!

ஊட்டியில் இருந்து கேரளாவுக்கு கேரட்டுகளை ஏற்றி வந்த பிக்கப் ட்ரக், நேற்று நள்ளிரவு கே ஜி சாவடி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மூன்று மின் கம்பங்கள் மீது மோதி நின்றது.


கோவை: ஊட்டியை சேர்ந்தவர் டேனியல் (23). இவர் வழக்கமாக ஊட்டியில் இருந்து கேரளாவிற்கு கேரட் லோடு ஏற்றி செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று வழக்கம் போல கேரட் லோடு ஏற்றிக்கொண்டு இரவு ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் சொரணூர் நோக்கி கிளம்பியுள்ளார். அப்போது, நள்ளிரவு 12.30 மணியளவில் ஜே.ஜி.சாவடி - வேலந்தாவளம் வீரப்பனூர் அருகே வந்த போது, டேனியல் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.



இதனால் சாலையில் ஒரு வளைவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன், சாலை ஓரத்தில் இருந்த அடுத்தடுத்த 3 கம்பங்கள் மீது மோதி நின்றது.



இதில், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் டேனியல் மற்றும் உடன் வந்த இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.



இதையடுத்து, தகவலறிந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...