நீலகிரி கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் பிடிபட்ட 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு

கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்றை கண்ட தேயிலை தோட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டு காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.


நீலகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார தேயிலை எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்துடனே பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பிக்காபதி பிரிவு, பெரகனி நெடுகுளா கிராமத்தில் குடியிருப்புகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது.

இதை கண்டு அதிர்ச்சியான தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வனசரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் குட்டன், வன காவலர் ராஜேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதனை தொடர்ந்து, தேயிலை தோட்டத்தில் படுத்து கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்துச் சென்றனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...