கோத்தகிரி அடுத்த அரவேனு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி சுற்றித்திரியும் ஒற்றை கரடி குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர்.
இந்த நிலையில் கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. கரடி வந்து செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே செல்ல மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே அடிக்கடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்கவும், மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.