முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் எஞ்சின் - கோவை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், நீலகிரி மலைரயில் பாதைக்காக முதல்முறையாக முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட டீசல் எஞ்சினின் சோதனை ஓட்டம் இன்று மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு நூற்றாண்டு பழமைவாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் எஞ்சின்களும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் மூலம் இயங்கும் ரயில் எஞ்சின்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலைரயிலுக்கென பிரத்யேகமாக டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும் நீராவி ரயில் எஞ்சின் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

மலை ரயில் எஞ்சினின் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடன் ரூ.9.30 கோடி மதிப்பில் 7 மாதத்தில் புதிய மலை ரெயில் எஞ்சின் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரயில் என்ஜின் ட்ரெய்லர் வாகனத்தில் ஏற்றப்பட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள லோகோ செட் பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரயில் எஞ்சின், பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.



சோதனைக்கு பின்னர் முதல் கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புதிய மலை ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.



புதிதாக தயாரிக்கப்பட்ட டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் என்ஜினில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்ட ரயில் புறப்பட்டு சென்றது. மலை ரயில் பாதையில் சோதனை ஓட்ட ரயில் செல்லும் போது எஞ்சினில் ஏற்படும் மாற்றங்களை ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த புதிய எஞ்சின் மூலம் மலை ரயில் இயக்கப்படும் போது, குறைந்த அளவிலான புகை மற்றும் சத்தமும் குறைவாக வரும் என்பதால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...