பொள்ளாச்சி ஜோதிநகர் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து திருட முயன்ற திருடனை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவை பொள்ளாச்சி அடுத்த ஜோதி நகர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புகளின் சுவற்றில் ஏறி திருட முயன்ற நபரை, மடக்கி பிடித்த பொதுமக்கள், கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து, கோவை கிழக்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி ஜோதி நகர் அருகே உள்ள குறிஞ்சி நகர் மற்றும் லட்சுமி நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில், மர்ம நபர்கள் இருவர், வீடுகளின் காம்பவுண்ட் சுவர்கள் மீது ஏறி குதித்து திருடன் முயன்றுள்ளனர்.

இதனிடையே சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பொதுமக்கள், கூச்சலிட்டதும் இருவரும் தப்பி ஓட முயன்றனர். இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் துரத்திச் சென்றதில் ஒருவன் தப்பியோடிய நிலையில் மற்றொருவனை பிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவனை அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவை கிழக்கு காவல் நிலைய போலீசார், பிடிபட்ட திருடனிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கும்பகோணம், திருவடைமருதூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...