கோவை விமான நிலையத்திற்கு வந்த போலி வெடிகுண்டு மிரட்டல் - மனநிலம் பாதிக்கப்பட்ட இராணுவ வீரரின் மனைவியால் பரபரப்பு.

கோவை விமான நிலையத்துக்கு செல்போனில் தொடர்பு கொண்ட பெண், தமிழகத்தில் உள்ள தாஜ் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், போலீசாரின் விசாரணையில் அவர் தஞ்சையை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது


கோவை: கோவை விமான நிலையத்தில் உள்ள ஒரு விமான நிறுவன அலுவலகத்துக்கு பெண் ஒருவர், செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், கோவை, மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள தாஜ் ஓட்டல்களுக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படியும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்று எச்சரித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விமான நிறுவன அலுவலக ஊழியர்கள், இதுகுறித்து கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, போலீசார் அந்தப் பெண் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், அந்த பெண் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்று போலிசாருக்கு தெரியவந்தது.

இதனிடையே அந்த பெண்ணின் கணவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும்

தெரியவந்தது.

மேலும், அந்த பெண் நிதானமற்ற நிலையில் கோவையில் உள்ள விமான நிறுவனத்துக்கு செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில் அந்த பெண்ணை போலீசார் எச்சரித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...