கணேசபுரம் பகுதியிலுள்ள அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் கட்டுமான பணிகளை விரைவாக செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவை: தெற்கு மண்டலம் குறிச்சி குளத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக தரத்தில் திருவள்ளுவர் சிலை அமைத்தல், தமிழர் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளை, பாரம்பரிய கலாச்சார ஓவியங்கள், சிலைகள் அமைத்தல், வண்ண மின்விளக்கு அமைத்தல் மற்றும் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செயல்பட்டு வருகின்றன.

மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப் இன்று குறிச்சி குளத்தில் நடைபெறும் சீர்மிகு நகர திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிலைகள் அமைத்தல், பாரம்பரிய சின்னங்கள் அமைக்கும் பணிகளுக்கான மாதிரிகள் தயாரித்து முறையாக ஓப்புதல் பெற்று நிறுவவேண்டுமெனவும், பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தெற்கு மண்டலம் வார்டு எண்.100-க்குட்பட்ட போத்தனூர் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் (Micro Compost center) தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டவர் பின்னர் கணேசபுரம் மேட்டூர் கால்வாயில் ரூ.8.2 இலட்சம் மதிப்பீட்டில் 2.2 கிலோ மீட்ட தொலைவிற்கு நடைபெறும் தூர்வாரும் பணியினையும் நேரில் ஆய்வு செய்து செய்தார் பணிகளை விரைவாக செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளார்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, கணேசபுரம் பகுதியிலுள்ள அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டமான பணிகளை விரைவாக செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் முருகேஷ், தெற்கு மண்டல தலைவா் ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம் பாஷா, குணசேகரன், உதவி ஆணையாா் தஅண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலா் சத்யா, உதவி பொறியாளர்கள் சபரீசன், சரவணக்குமார், சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.