சாமனிய மனிதனுக்கு முன்னால் அரசாங்கம் கைகட்டி பதில் சொல்லும் வகையான சட்டம் இன்றுடன் உருவாக்கபட்டு 17 வருடங்கள் ஆகிறது

இன்று தகவல் அறியும் சட்டம் உருவாகிய நாள் விதமாக கோவை மாவட்ட RTI ஆர்வலர்கள் சார்பில் இன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிக்கும் வகையில்கொண்டாட்டம்.


கோவை: இன்று தகவல் அறியும் சட்டம் உருவாகிய நாள் இந்தச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் உள்ள எந்தவொரு குடிமகனும் "பொது அதிகாரம்" அதாவது அரசாங்க அமைப்பு அல்லது "அரசின் கருவி" அமைப்பிலிருந்து தகவல்களைக் கோரலாம். அதற்கு உடனடியாகவோ அல்லது முப்பது நாட்களுக்குள்ளோ பதிலளிக்க வேண்டும்.

17 வருடங்களுக்கு முன்னர் இந்த சட்டமானது இயற்றப்பட்ட போது இந்த அளவிற்கு இந்த சட்டம் அரசிற்கு குடைச்சல் கொடுக்கும் என்று அன்று அரசாங்கமே எதிர்பார்த்திருக்காது.

இந்த சட்டத்தின் படி தகவல்களை பெற இன்றும் பல தடைகள் உருவாக்கப்பட்டாலும் அனைத்து தடைகளையும் தகர்த்து தகவல் அறியும் சட்ட உரிமை விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் மக்கள் மனதில் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த சட்டம் நிர்வாக, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை உட்பட அனைத்து அரசியலமைப்பு மையங்களையும் உள்ளடக்கியது. பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றம் என எந்தவொரு நிறுவனம் அல்லது அமைப்பின் அரசாங்க ஆவணங்களையும் இந்த சட்டத்தின் மூலம் ஆய்வு செய்யலாம். எந்தவொரு அரசாங்க வேலைகளையும் ஆய்வு செய்யலாம். ஒவ்வொரு குடிமகனும் எந்தவொரு அரசு ஆவணங்களையும், அரசு பணிகளையும் இந்த சட்டத்தின் கீழ்படி ஆய்வு செய்யலாம்.

சட்டத்தை மக்கள் அனுகுவது எப்படி:-

மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற விண்ணப்பத்தை பொது தகவல் அதிகாரிக்கு ரூ.10 கட்டணத்துடன் அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பி 30 நாட்கள் ஆகியும் உங்களுக்கு தேவையான தகவல் கிடைக்கவில்லை என்றால் மத்திய தகவல் ஆணையத்தை (Central Information Commission (CIC)) அணுகலாம்.

இச்சட்டத்தின்படி தவறு செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காமை, தவறான தகவல்கள் தருதல் அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தருதல் ஆகியவற்றிற்காக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கலாம்.

மேலும் தலா 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் தகவல் அலுவலரிடமிருந்து அபராதம் வசூலிக்கவும் இச்சட்டம் வழிகோலுகின்றது. இருப்பினும் அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்க வேண்டும். பொதுத் தகவல் அலுவலர் தான் நியாமாகவும் கவனத்துடனும் செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு அவரையே சாரும்.

RTI ஆர்வலர்கள் கொண்டாட்டம்:-



சாமனிய மனிதனுக்கு முன்னால் அரசாங்கம் கைகட்டி பதில் சொல்லும் வகையான சட்டம் உருவாகிய நாள் இன்றுதான்.



சமூக ஆர்வலர்களுக்கும் இன்றைய நாளில் தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்ட இந்த தினத்தை RTI பிறந்த நாளாக கொண்டாடும் விதமாக கோவை மாவட்ட RTI ஆர்வலர்கள் சார்பாக இன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...