முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் மறைவு: வால்பாறை அரசு கல்லூரியில் மவுன அஞ்சலி...!

வால்பாறையில் அரசு கல்லூரி அமைய முக்கியமான காரணமாக இருந்த மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்திற்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.



கோவை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் மறைவிற்கு, வால்பாறை அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

வால்பாறையில் அரசு கல்லூரி அமைய முக்கியமான காரணமாக இருந்த கோவை தங்கத்தை நினைவு கூர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி அனுசரித்தனர். பின்னர், அவரது திருவுவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்த கோவை தங்கம் (74) இன்று காலமானார் தனியார் மருத்துவமனையில் காலமானார்.



இவர், கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத்தில் கடந்த 2001 மற்றும் 2006ல், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின்னர், 2011-ல் இதே தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2006 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம், அப்போதைய திமுக ஆட்சியில் வால்பாறை எஸ்டேட் பகுதியில் வாழும் தொழில்லார்கள், குழந்தைகள் கல்லூரியில் படிப்பதற்கு பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதிகளுக்கு செல்வதால் அதிக சிரமம் ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி வால்பாறை பகுதியில் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் மு. கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.

அவரது தொடர் கோரிக்கையால், வால்பாறையில் அரசு கல்லூரி கட்டப்பட்டது. இருமுறை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம் அங்குள்ள எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த கோவை தங்கம் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போது அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழுவில் இருந்தார்.

அப்போது, வால்பாறை தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த அவர், வால்பாறையில் சுயேச்சையாக நிற்க போவதாக அறிவித்தார்.

பின்னர், சட்டமன்றத் தேர்தலுக்குஒரு மாதத்திற்கு முன்னதாக மார்ச் மாதம் தமிழ் மாநில காங்கிரஸ்யில் இருந்து விலகி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கோவையில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், நள்ளிரவு 12.20 மணியளவில் காலமானார்.

சாய்பாபா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...