கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வட மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் கைது - 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்…!

கோவையில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களில் விற்று வந்த மூவரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்றை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடவள்ளி பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த வட மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்தாஸ் (56) பிகாஸ் நாயக் (29) மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரிபுல் அலி (25) என்பது தெரியவந்தது.



மேலும், அவர்களிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் கோவை புறநகர் பகுதியில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...