வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு அரசு பேருந்து வராததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வால்பாறை எஸ்டேட் பகுதிகளான ஊசிமலை உள்ளிட்ட இடங்களுக்கு இன்று அரசு பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை எஸ்டேட் பகுதிகளான ஊசிமலை, ஊசிமலை டாப், வெள்ளமலை டாப், ஆகிய பகுதிகளில் இன்று மாலையில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

அரசு பேருந்துகள் வராததால் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் இது குறித்து பேருந்து அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.



பேருந்துகள் வரும் என்ற நம்பிக்கையில் பல மணி நேரம் காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு கட்டத்திற்கு மேலாக பொறுமை இழந்த மக்கள் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்களின் போராட்டத்தை அறிந்து அப்பகுதிக்கு வந்த நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன் மற்றும் வீரமணி ஆகியோரும் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர், கற்பகம் தலைமையிலான காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் அரசு பேருந்து டிப்போ மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பேருந்து ஏற்பாடு செய்தனர்.

மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவர்களது போராட்டத்தை கைவிட்டனர். மக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் வால்பாறை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...