உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டு சிறை - மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார்.


நீலகிரி: ஊட்டி அருகே 7ம் வகுப்பு படித்து வந்த மாணவியின் தந்தை அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

தினமும் வேலைக்கு செல்லும்போது மாணவியின் தந்தை பக்கத்து வீட்டில் உள்ள ஸ்ரீகாந்த் என்பவரிடம் வீட்டு சாவியை கொடுத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கூடம் முடிந்து விட்டு சாவியை வாங்குவதற்காக ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீகாந்த் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக, சிறுமியின் பெற்றோர் உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் ஶ்ரீகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பு கூறினார்.

அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில் குமார் ஆஜராகி வாதாடினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...