நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

கடந்த 4 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் நடைபெறாமல் உள்ள ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு அறிவித்த பணி மேம்பாடு முழுமையாக அமல்படுத்த கோரி பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோரிக்கைகள்

கடந்த எட்டு ஆண்டுகளாக, கல்லூரி பேராசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த இணை பேராசிரியர் பணி மேம்பாட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதலின்படி உரிய திருத்தம் செய்து கல்லூரி ஆசிரியர்களுக்கு முனைவர் மற்றும் ஆய்வியல் நெறிஞ்சர் பட்டத்திற்கான ஊக்க தொகை உடனடியாக வழங்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பணி மேம்பாடு உட்பட அனைத்து தேக்க நிலையை தவிர்ப்பதற்கு அறிவிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெறாமல் உள்ள ஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆகிய இந்த நான்கு கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி மாலை அனைத்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், வரும் அக்டோபர் 30ஆம் தேதி அனைத்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் மையங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் போது, தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் அறிவித்துள்ளனர்.

எனவே, தமிழக உயர்கல்வித்துறை உடனடியாக சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...