கோவை வடக்கு மண்டல பகுதிகளில் நடைபெறும்‌ தூய்மைப்பணிகளை மாவட்ட ஆணையாளர்‌ நேரில்‌ ஆய்வு..!

கோவை பீளமேடு, பாரதிகாலனிகளில் செயல்பட்டுவரும் தூய்மைப்பணிகளை மாவட்ட ஆணையாளர்‌ மு.பிரதாப் நேரில்‌ ஆய்வு செய்து அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை: வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.27-க்குட்பட்ட பீளமேடு, பாரதி காலனி பகுதியில்‌ மழைநீர்‌ வடிகாலில்‌ உள்ள குப்பைகள்‌, செடி கொடிகள்‌, அடைப்புகளை அகற்றி தூர்வாரி‌ உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரவும்‌, பழுதான பகுதிகளை புனரமைக்கவும்‌, தேவையான இடங்களில்‌ மழைநீர்‌ வடிகால்‌ கட்டவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அலுவலா்களுக்கு அறிவுறுத்தினர்.



அப்பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை ஆய்வு செய்தவர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



பீளமேடு, பாரதி காலனி பகுதியில்‌ மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளா்கள்‌ வீடுவீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவதையும்‌, தேவையில்லாத பொருட்களை அகற்றி பணிகளில்‌ ஈடுபட்டு வருவதையும்‌, பொதுமக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதையும்‌ ஆய்வு செய்தார்.



மேலும் பிற பணிகளில்‌ ஈடுபடுபவர்களை பார்வையிட்டு, விளாங்குறிச்சி பகுதியில்‌ பயன்பாட்டில்‌ இல்லாத நுண்ணுயிர்‌ உரம்‌ (Micro Compost center‌) தயாரிக்கும்‌ மையதில்‌ நேரில்‌ ஆய்வு செய்து, தேவையான இயந்திரங்கள்‌ வாங்கி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளா்‌ அவர்கள்‌, பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள்‌ சித்ரா வெள்ளிங்கிரி, அம்பிகா தனபால்‌, உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளா்‌ செந்தில்பாஸ்கர்‌, உதவி நகரமைப்பு அலுவலா்‌ விமலா, சுகாதார அலுவலா்‌ இராதாகிருஷ்ணன்‌, உதவி பொறியாளர்கள்‌ ஜோதி விநாயகம்‌, நாசா்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலாகள்‌ உடனிருந்தார்கள்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...