கோவையில் ஆடிட்டரின் வங்கி செயலியை பயன்படுத்தி ரூ.26 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் ஊழியர் மட்டும் கணவன் கைது

ஆர்.எஸ்.புரத்தில், 85 வயதுடைய ஆடிட்டரிடம் வேலை பார்த்து வந்த ரேவதி என்ற பெண், செலவீனங்களை காரணம் காட்டி ஆடிட்டரின் போனை வாங்கி ஓடிபி மூலம் தன் கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்து வந்தது அம்பலம்.



கோவை: கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் சார்ட்டட் அக்கவுண்ட் அலுவலகம் நடத்தி வருபவர் முதியவரான ஆடிட்டர் அய்யாவு (85). இவருக்கு ஆறு மகள்கள் உள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வேலை கேட்டு ரேவதி என்ற பெண் இவரிடம் வந்துள்ளார். தகுதியின் அடிப்படையில் கிளார்க் வேலை தந்த அய்யாவு, மாத சம்பளமாக ரேவதிக்கு ரூபாய். 17,500 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்துள்ளார். பின்னர், ரேவதிக்கு அலுவலகத்தில் உள்ள கணக்கு வேலைகளையும், வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூல் செய்து பேமண்ட் ஃபாலோ செய்வது குறித்து பயிற்சி அளித்துள்ளார்.

கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதி; ஊழியருக்கு பண பரிவர்த்தனை செய்ய அனுமதி

கடந்த 2020 ஆம் ஆண்டு அய்யாவு மற்றும் குடும்பத்தார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது, அலுவலக பணிகளை முறையாக கவனிக்க முடியவில்லை என்பதால், ரேவதிக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து வங்கி பரிவர்த்தனைகளை பார்க்க சொல்லியுள்ளார்.

மின் கட்டணம் செலுத்துவது, அய்யாவுக்கு சொந்தமான பண்ணைக்கு பண பரிவர்த்தனை செய்வது, வாடிக்கையாளர்களின் பணத்தை வங்கியில் இருப்பு வைப்பது உள்ளிட்ட பணிகளை ரேவதி மேற்கொண்டு வந்துள்ளார்.

அய்யாவுவின் மகள்களும் ரேவதியை நம்பி பணம் பரிவர்த்தனை செய்ய அனுமதி தந்துள்ளனர்.

காட்டிக் கொடுத்த மெசேஜ்

கடந்த சில நாட்களுக்கு முன் அய்யாவு அலைபேசிக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது. அதில், அய்யாவு அக்கவுண்டிலிருந்து ரேவதி அக்கவுண்டுக்கு 25,000 ரூபாய் பணம் மாற்றப்பட்டுள்ளது என்று அந்த குறுஞ்செய்தி தெரிவித்தது.

இதனை அய்யாவு மகள் ஒருவர் பார்த்துவிட, ஏதோ தவறு நடப்பதனை உணர்ந்து கொண்டனர். இந்த நிலையில், ரேவதி வங்கி கணக்குக்கு வேறு ஏதேனும் பணம் பரிவர்த்தனை நடந்திருக்கிறதா..? என்று அறிய முற்பட்டனர்.

அப்போது தான் ரேவதி செய்த நூதன தில்லுமுல்லுகள் மற்றும் பித்தலாட்டம் அம்பலமானது.

26 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபேஸ்..!

இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளின் வங்கி கணக்கு மற்றும் அலுவலக கையேடுகளை முழுவதும் அய்யாவு ஆய்வு செய்தார். அப்போது, 2021 பிப்ரவரி முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை அவரின் அனுமதி பெறாமல், முறைகேடாக அவரது வங்கி கணக்கிலிருந்து பண பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது.

மொத்தமாக, அவரது கணக்கிலிருந்து மட்டும் 17 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பணத்தை ரேவதி நூதன முறையில் கொள்ளையடித்து உள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

அதேபோன்று, அலுவலகத்தில் வசூல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபாய் மற்றும் அய்யாவு மகள்களின் பணம் 2 லட்சத்து ஐம்பதாயிரம், வாடிக்கையாளர்கள் தந்த பணம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 26 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் ரேவதி மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.

மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கோல்மால்

மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அய்யாவுவின் அலைபேசியை பெற்று, அதில் உள்ள வங்கி செயலி மூலமாக ரேவதி தன் வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி இருக்கின்றார். அவ்வாறு மாற்றப்படும் பணம் அலுவலக புத்தகத்தில், அய்யாவுவிற்கு சொந்தமான தோட்டப்பணிகள் மற்றும் இதர செலவீனங்களுக்காக மாற்றப்பட்டதாக ரேவதி கணக்கு புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இன்ஸ்டால்மெண்ட் முறையில் கொள்ளை..!

மொத்தமாக பணத்தை கொள்ளையடித்தால் மாட்டிக்கொள்வோம் என்பதனால் 15 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் என அவ்வப்போது சிறிய தொகைகளை தன் வங்கி கணக்கிற்கு ரேவதி மாற்றி வந்துள்ளார்.

மேலும், பணம் மாற்றப்பட்டதற்கான மெசேஜ் மற்றும் OTP மெசேஜ்களை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக அவற்றை அவ்வப்போது டெலீட் செய்து வந்த ரேவதி, டெலிட் செய்த பின்னும் அவை ட்ராஸ் பின்னில் (Trash Bin) இருக்கும் ஓடிபி மெசேஜை டெலீட் செய்ய மறந்துவிட்டார். இதுவே, அவர் செய்து வந்த மோசடியை காட்டிக் கொடுத்துள்ளது.

குடும்பத்தோடு கோல்மால்







ரேவதி செய்து வந்த பித்தலாட்டங்களுக்கு உறுதுணையாக அவரது குடும்பத்தாரும் இருந்துள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி. நடந்த கையாடலில் ஒரு குறிப்பிட்ட தொகையை ரேவதியின் கணவர் தினேஷ் வங்கி கணக்கிற்கும் மாற்றப்பட்டு உள்ளது.

இந்த ஒட்டு மொத்த கையாடலுக்கு பின்புலத்தில் ரேவதி மட்டுமின்றி, அவரது கணவர் தினேஷ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உதவி செய்ததாக கூறப்படுகின்றது.

காவல் நிலையத்தில் புகார்

மகள் போல் பாவித்து நம்பிக்கையுடன் பல்வேறு பொறுப்புகளை தந்த நிலையில், அதனை துஷ்பிரயோகம் செய்து நம்பிக்கை துரோகம் செய்து லட்சக்கணக்கில் கொள்ளையடித்த ரேவதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அய்யாவு ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் பரிமளா தேவி மற்றும் உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த ரேவதி மற்றும் அவரது கணவர் தினேஷை கைது செய்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை ஆடம்பரம் செலவுக்காகவும், நகைகளை வாங்கவும் ரேவதி மற்றும் அவரது குடும்பத்தார் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆடிட்டர் அய்யாவுவின் வயது மூப்பு மற்றும் அவர் வைத்த அதீத நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் அவரது ஊழியர் கொள்ளையடித்த சம்பவம் பலருக்கும் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நம் வங்கிகளில் இருந்து வரும் ஓடிபி, வங்கி செயலியின் ரகசிய எண், ஆகியவற்றை பிறரிடம் கொடுக்கக்கூடாது. அவ்வாறு, வேறு வழியின்றி மற்றவர்களிடம் கொடுத்தாலும், இறுதியில் அந்த பணம் பரிவர்த்தனையை சரிபார்த்து அனுமதிக்கும் பொறுப்பு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், வயதானவர்களின் உடல்நிலை மற்றும் சூழ்நிலைகளை பயன்படுத்தி, கனிவாகப் பேசி, பணத்தை ஆட்டையை போடும் கும்பலிடம் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவமே சான்றாகும்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...