'அமைதியான கோவை அனைவருக்கும் தேவை' மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

அனைத்து கட்சியினர் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் கோவையில் நடைப்பெற்றது அதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் கலந்துகொண்டன.


கோவை: மக்களிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, சமூக நல்லிணக்க மனித சங்கிலி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



கோவையில் கடந்த மாதம் இரு பிரிவினர் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், கோவையில் அமைதியை பேணிக்காக்கும் வகையில் வலியுறுத்தி கோவை காந்திபுரம் பகுதியில் நஞ்சப்பா சாலை மற்றும் கிராஸ்கட் சாலை உள்ளிட்ட இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.



சி.பி.எம் மாவட்ட செயலாளர் பத்மநாபன், தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுடனர் அவர்கள் "அமைதியான கோவை அனைவருக்கும் தேவை, அமைதியான தமிழகம் அனைவருக்கும் தேவை" என்ற கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 15 நாட்களாக இந்து அடிப்படைவாத அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கோவையை பதற்றம் மிகுந்ததாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஜனநாயக, மத சார்பற்ற, இடதுசாரி அமைப்புகள் அம்பேத்காரிய, பெரியாரிய அமைப்புகளின் ஒன்றிணைந்து ”அமைதியான கோவை அனைவருக்கும் தேவை” ”அமைதியான தமிழகம் அனைவருக்கும் தேவை” என்பதற்காக தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

இதன் மூலம் எல்லோரும் சமம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்று மனித சங்கிலி மூலமாக வேண்டுகோள் விடுக்கிறோம். மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த மனிதசங்கிலியில் கலந்து கொண்டுள்ளனர். என்றார்.

இதுகுறித்து மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:

தமிழகத்தில் மதவெறியை வளர்த்து தமிழர்களை பிரித்து அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினைவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடிய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் அரசியலை எதிர்த்து ஜன நாயக அமைப்புகள் நடத்தும் மனித சங்கிலியில் பெருந்திரளாக மக்கள் பங்கெடுத்து தமிழகத்தில் இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்று நிரூபித்துள்ளனர்.

மோடி அரசால் கொண்டுவரப்படும் மதவெறி அரசியலை வேரோடு பிடிங்கி எரிவோம் என்பதை இந்த மனிதசங்கிலி இந்தியாவிற்கு எடுத்துரைக்கிறது. கட்சி, சாதி, மதம் கடந்து இந்துதுவ மதவெறி அரசியலுக்கு எதிராக கரம் கோர்த்து நிற்கிறோம். இதுதான் இந்த மண்ணின் அரசியல், மார்கிஸின் அரசியல் அம்பேத்கரின் அரசியல். என அவர் கூறினார்.



சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் திராவிடர் கழகங்கள்.



இந்திய தேசிய காங்கிரஸ் மறுமலர்ச்சி, திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய தேசிய முஸ்லீம், எஸ்.டி.பி.ஐ, நாம் தமிழர் கட்சி, சிபிஐ (எம்.எல்-விடுதலை), தமிழ்ப்புலிகள் கட்சி, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ், தமிழக விடியல் கட்சி, பீமாராவ் குடியரசு கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் தமிழர் கட்சி, சிஐடியூ, ஏஐடியூசி, எல்.எல்.எப் மக்கள் மன்றம், புலிப்படை தமிழ்நாடு இளைஞர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மக்கள் அதிகாரம், டிசம்பர் 3 இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், தமிழ்நாடு மாணவர்கள் இளையோர் கூட்டமைப்பு, தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச்சங்கம், தமிழ்நாடு படைப்பாளிகள் கூட்டமைப்பு, இந்திய ஜவுஹித் ஜமாத் மக்கள், ஜனநாயக முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...