ஜவுளித்துறையை மேம்படுத்தும் வகையிலான பின்னலாடை கண்காட்சி டிசம்பர் 8ம் தேதி தொடக்கம் - திருப்பூரில் ஐ.டி.எம்.இ பொருளாளர் கேதன் சங்வி

‘இந்தியா ஐ.டி.எம்.இ.,–2022‘ என்ற பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறவுள்ள ஜவுளித்துறை கண்காட்சியின் மூலம் வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முடியும் என தகவல்.


திருப்பூர்: ஜவுளித்துறையை மேம்படுத்தும் வகையில் இந்தியா ஐ.டி.எம்.இ., சொசைட்டி சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 2016க்கு பிறகு 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கண்காட்சியானது கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், கொரோனா தளர்வுகள் முழுமையாக அமலுக்கு வந்த நிலையில், 11வது கண்காட்சியாக ‘இந்தியா ஐ.டி.எம்.இ.,2022‘ கண்காட்சி, உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில், வரும் டிசம்பர் 8ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், இந்திய ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திர வர்த்தகத்தின் திருப்பு முனையாக அமையும் என தொழில்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து, திருப்பூரில் இந்தியா ஐ.டி.எம்.இ., நிறுவன பொருளாளர் கேதன் சங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவில் 2.35 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமான கண்காட்சி மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திரங்களை காட்சிப்படுத்த, 22 பிரிவுகளாக, 1,100 ஸ்டால்கள் அமைய உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜவுளி கேந்திரமாக உள்ள இந்தியாவில், நடக்கும் கண்காட்சி, சர்வதேச அளவில் புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரான இயந்திரங்கள், ஜவுளித்துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்.

கண்காட்சியில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 110க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

‘இந்தியா ஐ.டி.எம்.இ.,–2022‘ கண்காட்சி, நார்ப்பொருள், ஜவுளி உற்பத்தி தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நடக்க உள்ளது. சர்வதேச சந்தைகளில் இருந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்களும் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில், இந்த கண்காட்சி பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அமையும். சர்வதேச அளவில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிறுவனங்களுக்கு இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.

திருப்பூர், கோவை ஈரோடு, சேலம், மதுரை, உட்பட, பல்வேறு மாவட்ட மற்றும் மாநில தொழில்துறையினருக்கு கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...