பராமரிப்பின்றி மூடியே கிடக்கும் கழிப்பிடங்கள் - மக்கள் நீதி மய்யம் மனு

கெம்பட்டி காலனி பின்புறம் உள்ள உப்பு மண்டி மக்களுக்கு கழிப்பறை கட்டிதருவதாக மக்கள் நீதி மய்யம் உறுதி அதற்கு இடம் ஒதுக்கி தருமாறு மாவட்ட ஆணையருக்கு மனு அளிப்பு.


கோவை: கோவை வார்டு 80-ல்‌ உள்ள கெம்பட்டி காலனி, உப்பு மண்டி பின்புறத்தில் பல நூறு குடும்பங்கள்‌ வாழ்கின்றனர்‌. இவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை. பெறும்பான்மையானோர்‌ உப்பு மண்டியில்‌ உள்ள பொதுகழிப்பிடத்தை தான்‌ உபயோக படுத்துகிறார்கள்‌ அதிலும்‌ பல கழிப்பிடங்கள்‌ பராமரிப்பின்றி மூடியே கிடக்கிறது.

ஆகையால்‌ பொதுகழிப்பிடத்தை நல்லமுறையில்‌ சீர்‌ செய்து அனைத்து பொதுமக்களும்‌ உபயோகம்‌ படுத்தும்‌ வண்ணம்‌ செய்ய வேண்டும்‌. மேலும்‌ கழிப்பிட பற்றாக்குறையை சரி செய்ய எங்கள்‌ கட்சி தலைவர்‌ ர. கமல்ஹாசன்‌ அவர்களின்‌ நற்பணிமன்றம்‌ மூலம்‌ பொது கழிப்பிடம்‌ கட்டித்தர தயாராக உள்ளார்‌. அதற்கு தங்கள்‌ அரசின்‌ சட்டத்திற்கு உட்பட்ட அப்பகுதியில்‌ நல்ல கழிப்பிடம்‌ கட்ட ஒரு இடத்தை பொதுமக்கள்‌ பயனிற்கு ஒதுக்கி தருமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்‌.

சமீபத்தில் கோவை தெற்கு தொகுதி மக்களை சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் Dr கமல்ஹாசன் 80 வது வார்ட் கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள உப்பு மண்டி பின்புறத்தில் வசிக்கும் சுமார் 800 குடும்பங்களுக்கு சரியான கழிப்பிட வசதி இல்லை என்று அறிந்து டாக்டர் கமலஹாசன் அவர்கள் கழிப்பிட வசதி தன் சொந்த செலவில் கட்டித்தர முன்வந்துள்ளார்.

அதற்கு இடம் ஒதுக்குமாறு கோவை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் பிரபு அவர்கள் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது உடன் நிர்வாகிகள் தாஜுதீன், பூபதிராஜ, கிருஷனமூர்த்தி, மணிகண்டன் மற்றும் சக்கரவர்த்தி உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...