பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தின் ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் திடீர் ஆய்வு

ஆவணங்களை ஆண்டு வாரியாக ஒழுங்குபடுத்தவும், பொதுமக்கள், விவசாயிகள் நில ஆவண நகலை கோரும்போது உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழைய நில ஆவணங்களின் நகல் கேட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பங்கள் அளித்து வந்தனர். ஆனால், நில ஆவணங்களின் நகல்களை வழங்குவதற்கு அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை பார்வையிட்டார்.



இதனையடுத்து பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை வருடம் வாரியாக ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நில ஆவணங்களின் நகலை கேட்டால், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...