கோவை நாச்சிபாளையத்தில் கடைக்குச் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை மாயம் - பரபரப்பு..!

நாச்சிபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான சுப்புலட்சுமி, கடைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததால், அவரது தந்தை ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட நாச்சிபாளையம் பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுப்புலட்சுமி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிகமாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சுப்புலட்சுமி, திருப்பூரில் உள்ள ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதற்கு தந்தை ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வீட்டிலிருந்த சுப்புலட்சுமி நேற்று மாலை கடைக்கு சென்றுள்ளார்.

ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் சுப்புலட்சுமி கிடைக்காததால் தந்தை ஜெயராஜ், மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சுப்புலட்சுமியை தேடி வருகின்றனர்.

கடைக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியை மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...