கோவை ஈச்சனாரி மற்றும் அரிசிபாளையத்தில் உள்ள தனியார் ரெஸ்டாரன்ட்களில் சட்டவிரோத மது விற்பனை - இருவர் கைது.

மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஈச்சனாரி மற்றும் அரிசிபாளையம் பகுதியில் உள்ள ரெஸ்டாரன்ட்களில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 31 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம் தலைமையிலான போலீசார் நேற்றிரவு குறிப்பிட்ட அந்த ரெஸ்டாரண்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ரெஸ்டாரண்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அன்புராஜை கைது செய்தனர்.

இதேபோல் அரிசிபாளையம் பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டில் சோதனை செய்த போலீசார், அங்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...