காவலர்களுக்கு இடையே உள்ள மன அழுத்தத்தை எப்படி மேலாண்மை செய்வது என்பது பற்றி காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில், மாநகர காவல் அலுவலகத்தில் Station Happiness Officers என்ற மனநல ஆலோசகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கோவை: 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 10 முதல் உலக மனநல தினம் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் மனநல சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் என்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் முதல் முறையாக இந்நாள் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக உலகளாவிய முன்னுரிமையாக அனைவருக்கும் மனநலம் மற்றும் நல்வாழ்வை ஏற்படுத்துதல் என வலியுறுத்தப்பட்டது.

இன்று அக்டோபர் 10 முதல் உலக மனநல தினம் உலக மனநலம் நாள் இது தொடர்பாக கோயமுத்துார் மாநகர காவல் துறையில் STATION HAPPINESS OFFICERS (SHO) என்ற பெயரில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் இரு நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுடைய மனநலத்தைப் பேணுவதில் காவல் ஆணையரின் பிரதிநிதிகளாகச் செயல்படுவர். இவர்கள் ஒரு சில குணநலங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காவலர்களிடையே நிலவும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி, தொடர்ந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வருவார்கள். இவர்களுக்கு இது தொடர்பாக தனிப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மனநோய் குறித்த அவப்பெயரை அகற்றி, முன்கூட்டியே விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதன் அவசியமுள்ளது. காவலர்களுக்கு இடையே உள்ள மன அழுத்தத்தை எப்படி மேலாண்மை செய்வது என்பது பற்றி காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில், மாநகர காவல் அலுவலகத்தில் மனநல ஆலோசகர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மனநலம் தொடர்பான சவால்கள் உள்ள காவலர்களுக்கு ஆலோசனைகள் இதன்மூலம் தொடர்ந்து வழங்கப்படும். தேவைப்பட்டால் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் அதுபோன்ற ஆலோசனைகள் வழங்கப்படும்.
கோபம் வருவதைக் கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், பொதுமக்களிடம் பண்பாகப் பேசுவதில் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் மனநலம் தொடர்பான ஆலோசனை தேவைப்படுவோர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்கள் மேற்கண்ட பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுபடும் வரை தொடர்ந்து ஆலோசனை கொடுக்கப்படும்.

அதேபோல், பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அந்தக் குற்றத்தால் ஏற்பட்ட மனநலம் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு வசதியாக காவல் ஆணையரகத்தில் மனநல ஆலோசகர்கள் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவர்.
கொலைக் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், தற்கொலைகள், சாலை விபத்துக்களால் மரணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கும் மேற்கண்ட மனநல ஆலோசனை அளிக்கப்படும். இதற்காக காவல் ஆணையரகத்தில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.