தென்னம்பாளையம் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

போதை பொருட்கள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிகளில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று எஸ்.பி. தெரிவித்துள்ளார்.


கோவை: இளம் சமுதாயத்தினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க கோவை மாவட்ட காவல்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்று சூலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தென்னம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின்படி அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, பொதியம்பாளையம் பிரிவு அருகே விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த வாகாரம்பாளையத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (20) என்பவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், போதை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தயங்காமல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிகளில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களில் பெயர் மற்றும் அடையாளங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...