கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ Helping Hearts தொண்டு நிறுவனம்‌ நடத்திய ஆதரவற்றோர்‌, வீடற்றோர் தினம்

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில்‌ வீடற்ற, ஆதரவற்றோர்கள்‌ தங்கும்‌ விடுதி துவக்கம் "ஆதரவற்றவர்கள்‌ யாரும்‌ கவலை கொள்ள தேவையில்லை” கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவிப்பு‌.



கோவை: கோவை மாநகராட்சி மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் (Helping Hearts) என்ற தொண்டு நிறுவனம்‌ இணைந்து உலக ஆதரவற்றோர்‌ தினம் கொண்டாடப்பட்டது.



ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக ஆதரவற்றோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.16 கே.என்‌.ஜி.புதூர்‌ பகுதியில்‌ ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கான நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தலைமையேற்று சிறப்பித்தார்.



அப்போது பேசிய மாநகராட்சி ஆணையர், ஆதரவற்றவர்கள்‌ யாரும்‌ கவலை கொள்ள தேவையில்லை. உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ செய்து தரும்‌ என்று உறுதி அளித்தார். 

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்றோர்‌, முதியோர்கள்‌ என 40 பேருக்கு இட்லி தயாரிக்கும்‌ பாத்திரங்கள் உட்பட 15 அத்தியாவசிய, பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்‌.

பின்னர், சிறப்புரையாற்றிய மாநகராட்சி ஆணையர், "இன்று உலக வீடற்றவர்களின்‌ தினமாக கொண்டாடப்படுகிறது. நமது கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில்‌ மொத்தம்‌ 5 வீடற்றோர்‌ தங்கும்‌ விடுதிகள்‌ உள்ளது. அதில், 280 வீடற்றோர்கள்‌ தங்கி உள்ளனர்‌. இந்த விடுதிகள், ஹெல்பிங் ஹாட்ஸ், ஈர நெஞ்சம்‌ டிரஸ்ட்‌ மற்றும்‌ மலரும்‌ விழிகள்‌ என்ற மூன்று தன்மானார்வை தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு, சமூக நல சங்கம்‌ மூலம்‌ பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

மேலும்‌, இங்கு தங்கியுள்ளவர்களுக்கு மாதமாதம்‌ மாநகராட்சி மருத்துவ குழு மூலம்‌ மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள்‌ வழங்கப்பட்டும் வருகின்றன.

தற்போது, கோவை மாநகராட்சியில்‌ 6550 சதுர அடியில்‌ ரூ.140 லட்சம்‌ செலவில்‌, சுமார 130 வீடற்றோர்கள்‌ தங்க வைத்திட காப்பகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.72ல்‌ கடலைக்கார சந்தில்‌ அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில்‌ வீடற்ற ஆதரவற்றோர்கள்‌ தங்கும்‌ விடுதி காப்பகம்‌ கட்ட தேவையான அடிப்படை பணிகள்‌ துவங்கியுள்ளது. 

ஆதரவற்றவர்கள்‌ யாரும்‌ கவலை கொள்ள தேவையில்லை. உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ செய்து தரும்‌", என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., அவர்கள தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மேற்கு மண்டல தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, நகர்‌நல அலுவலா்‌ மரு.பிரதிப்‌ வாசுதேவன்‌ கிருஷணகுமார்‌, மண்டல உதவி ஆணையர்‌ சேகா்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ தமிழ்செல்வன்‌, சம்பத்‌, பாபு, உதவி நகரமைப்பு அலுவலர்‌ கலாவதி, சுகாதார ஆய்வாளர்‌ சந்திரசேகரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் என பலர்‌ கலந்துக்கொண்டனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...