கோவை சீர்மிகு நகரத் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளார்

உக்கடம் பெரியகுளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி முழுக்க நகரத் திட்டப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அதில் உக்கடம் பெரியகுளத்தில் நடைபெறும் நகரத் திட்டப்பணியின் மதிப்பீடானது ரூ.62.17 கோடி ஆகும். இப்பணியை இன்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள். நேரில் சென்று பார்வையிட்டார்.



இந்நலத் திட்டத்தில் மிதிவண்டி பாதை (Cycle Track), பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பர்வையாளர் மாடம் (Birds Watching Tower), கற்றல் மையம் (Learning Tower), அனுபவ மையம் (Experiance centre), Ghat plaza, நீர் திரையில் ஒலி, ஒளி காட்சி ஆகியவை அமையவுள்ளன இவற்றை நேரில் பார்வையிட்ட கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டுமானப்பணிகளை விரைவாக செய்து முடிக்க உத்தரவிட்டார்.



உக்கடம் பெரியகுளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணியில் தற்போது பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தி, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார். மேலும், கற்றல் மையம், அனுபவ மையங்களில் நீர்மேலாண்மை, சுற்றுச்சூழல், உள்நாடு மற்றும் வெளிநாடு பறவைகள் குறித்து தகவல்கள், கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல்களையும் 3D வடிவில் அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



இந்த ஆய்வின்போது மாநகரப்பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் பி.உமாதேவி, உதவிபொறியாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...