கிணத்துக்கடவு அருகே கத்தியை காட்டி பணம் பறித்த டிரைவர் கைது

கோவில்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம், ரூபாய் 500 பணத்தை கத்தி முனையில் மிரட்டி பறித்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகேயுள்ள கோவில்பாளையத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் ராம்குமார். இவர் கடந்த 8ம் தேதி வழக்கம் போல் இரவு தனது மொபைல் கடையில் இருக்கும் போது அங்கு வந்த எஸ். மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்த டிரைவரான கிருஷ்ணகுமார் ராம்குமாரிடம் மது குடிக்க 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

பணம் தர மறுத்த ராம்குமாரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்த ராம்குமார் 500 ரூபாய் பணத்தை கிருஷ்ணகுமாரிடம் வழங்கியுள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த ராம்குமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்றிரவு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த கிருஷ்ணகுமார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...