16ம் தேதி போராட்டம் - அனுமதியின்றி கட்டப்பட்ட ஈஷா, காருண்யா கட்டிடங்களை அகற்ற வேண்டும் - சி.பி.எம் அறிவிப்பு

அழகும் அமைதியும் நிறந்த கோவை மலையடிவாரத்தில் ஈஷா, காருண்யா நிறுவனம் அனுமதியின்றி நிலங்களை ஆக்கிரமித்தாக பல ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. இதை கண்டித்து வருகிற 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக சிபிஎம் அறிவித்துள்ளது.



கோவை: கோவை காந்திபுரம் சிபிஎம் அலுவலகத்தில் சி.பி.எம்., காங்கிரஸ், சி.பி.ஐ, மதிமுக, விசிக, தபெதிக மற்றும் அம்பேத்காரிய, பெரியாரிய அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் சுற்று சூழல் அனுமதி இன்றி லட்சகணக்கான சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஈஷா, காருண்யா நிறுவனங்களின் கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இதை எதிர்த்து 16 ம்தேதி ஆலாந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக சிபிஎம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.



இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



கோவை மக்களிடையே மதநல்லிணகத்தை ஏற்படுத்தும் விதமான நாளை மனித சங்கிலி நடைபெற்வுள்ளது. இதில் 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். மேலும் கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் மற்றும் காருண்யா கல்வி நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டி இருப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16 ம் தேதி அனைத்து கட்சி சார்பில் ஆலந்துறை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் 500 சதுர அடியில் அனுமதி இன்றி கட்டிடம் கட்டி இருந்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இந்த நிறுவனங்கள் 10 லட்சம் சதுர அடிக்கும் மேலான இடங்களில் எந்த அனுமதியும் இன்றி கட்டிடங்கள் கட்டியுள்ளனர். மலையடிவாரத்தில் உயிர் சூழலை பாதிக்கும் வகையில் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் 20 கி.மீ சுற்றளவில் யானைகள் வழிதடம் பாதிக்கப்பட்டு அவை தடம் மாறுகின்றன. இந்த ஈஷா, காருண்யா நிறுவனங்களுக்கு சுற்று சுழல் அனுமதி அளிக்க கூடாது, அனுமதி இன்றி கட்டப்பட்ட ஈஷா, காருண்யா நிறுவனங்களின் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி வரும் 16 ம் தேதி ஆலாந்துறையில் அனைத்து கட்சியினரும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். கல்வி நிறுவனங்களுக்கு சுற்று சுழல் அனுமதி தேவையில்லை என்பது மோசமான நடைமுறை. நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அனுமதியற்ற கட்டிடங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...