கோவையில் காலாவதியான மதகுகளை சீரமைக்க வலியுறுத்தல் - ஆழியார் பாதுகாப்பு இயக்க விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள 9 அணைகளில் காலாவதியான மதகு, சங்கிலி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளையும் போர்க்கால அடிப்படையில் மாற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பரம்பிக்குளம் ஆழியார் பாதுகாப்பு இயக்க விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் மதகுகள் மற்றும் சங்கிலி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் மாற்றக் கோரியும் பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது குறித்து விசாரிக்க விரைந்து ஆய்வு குழு அமைக்க வலியுறுத்தப்பட்டது.



அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் மதகுகளையும், சங்கிலிகளையும் சீரமைக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆழியாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினர், பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தில் உள்ள 9 அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன.

பரம்பிக்குளம் அணையின் சங்கிலி அறுந்து மதகு உடைந்து விட்டதால் விவசாயிகளின் உரிமை நீரான 6 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இத்திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் சங்கிலிகள் மதகுகள் காலத்தை கடந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இத்திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் மதகுகளையும், சங்கிலிகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...