கோவை கருமத்தம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது - 113 கிலோ குட்கா பறிமுதல்

கருமத்தம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக எடுத்துச் சென்ற வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரனை கைது செய்த போலீசார், கண்டெய்னர் லாரியுடன் 113 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா, போதை மாத்திரை, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக அவ்வப்போது தனிப்படை போலீசார், அதிரடியாக ரோந்து சென்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருமத்தம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அப்பகுதியில் போலீசார், தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அவ்வழியாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். சோதனையில் அந்த வாகனத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் கண்டெய்னர் லாரி மற்றும் அதில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 113 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் அடிப்படையில் சட்ட விரோத கும்பல் நடவடிக்கை ஒடுக்கப்பட்டு வருகின்றன.

போதை பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற போதை பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைக்கலாம் என்றும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...