தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை மர்மம் குறித்து விசாரிக்கப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு.
நீலகிரி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவில் பல மர்மங்கள் இருந்த நிலையில் அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தமிழகம் முழுவதும் சந்தேக அதிவலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்ப்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர்.
இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு காவல்துறை சார்பில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை தேவை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி முதல் தற்போது வரை 316 பேரிடம் விசாரித்துள்ளது. இது குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், மேலும் வாகன விபத்தில் இருந்த கனகராஜன் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் மற்றும் கொடநாடு மேலாளர் நட்ராஜ், சசிகலா, ஜெயா டிவி சிஇஓ விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்ட பலரிடமும் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி தமிழக டிஜிபி அவர்கள் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரிக்கப்பட்ட ஆவணங்கள் சீல் வைக்கபட்ட கவர்களில் வைத்து நீதிமன்றத்தில் இன்று தனிப்பட்ட போலீசாரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஒரு நகல் சிபிசிஐடி - போலீசாரிடம் கொடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணையை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.