பாரம்பரிய கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்ற பதக்கத்துடன் ஊக்கத்தொகை கோரி கோவை மாவட்ட ஆட்சியரரிடம் மனு

துடியலூர் அருகேயுள்ள அசோகபுரத்தில் உள்ள பாரம்பரிய கலை பயிற்சி பள்ளி மாணவர்கள், ஊக்கத்தொகை வழங்கிட வலியுறுத்தி, மாணவர்கள் வெற்றி பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள அசோகபுரத்தில் பாரம்பரிய கலைகளை கற்றுத்தரும் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் தற்காப்பு கலைகளான சிலம்பம், கராத்தே மற்றும் கிக் பாக்சிங் உட்பட பல்வேறு பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி பள்ளியில், 11 வயது முதல் 20 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள் என பலருக்கும் தற்காப்பு கலைகள் கற்று தரப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் ஏழமை நிலையில் உள்ளதால் சாதனைகள் செய்ய முடியவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்தநிலையில், மாணவர்கள் மாவட்ட மாநில தேசிய அளவிலும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர். இது குறித்து பயிற்சியளர் ஆனந்த்குமார் பேசியதாவது,

சிலம்பம், கராத்தே, வில் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தேசிய அளவில் விருதுகளை இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். தொடர்ந்து பயிற்சி கிடைக்க ஊக்கத்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற பதக்கங்களுடன் வந்த மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...