திருப்பூர் வார்டு 25க்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி

நேற்று இரவு திருப்பூர் மாநகர் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்ததையடுத்து மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் பகுதிகளில் பயணிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகினர்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெளியேற வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.



இதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சியின் 25வது வார்டுக்கு உட்பட்ட மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரானது வெளியேற வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.

இந்தப் பகுதியானது திருப்பூர் மங்கலம் செல்ல பிரதான சாலையாக உள்ள காரணத்தினால் இந்த சாலை வழியாக பள்ளிக்கு மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகினர். மேலும் மழைநீர் தேங்கிய காரணத்தினால், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் கீழே விழுந்தனர்.



மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் வசதியானது முறையாக செயல்படுத்தவில்லை. எனவே சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...