வால்பாறை வனப்பகுதியில் ஆபத்தை உணராமல் யானைகள் அருகே சென்று செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வனப்பகுதிகளுக்கு அத்துமீறி சென்று ஆபத்தை உணராமல் யானைகளின் அருகே செல்பி எடுக்கும் சம்பவங்களை தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தல்.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் குட்டியிடனும் தேயிலைதோட்ட பகுதியில் ஆங்காங்கேசுற்றித் திரிந்து வருகின்றன.



இந்நிலையில், யானைகளை பார்ப்பதற்காகசுற்றுலா பயணிகள் வனப் பகுதிகளுக்குள் அத்துமீறி சென்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவ்வாறு அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல், யானைகளை புகைப்படம் எடுப்பது மட்டுமல்லாமல் செல்பியும், எடுத்து கொள்கிறார்கள். இதன் காரணமாக யானை - மனித மோதல் ஏற்படும் என்ற அச்சத்தில் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றின் அருகேயுள்ள வனப்பகுதியில் சுமார்10 நாட்களாக12 காட்டு யானைகள் சிறிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக சாலையைக் கடந்து தேயிலைத் தோட்டம் வழியாக கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்கு செல்கிறது.



இதையறிந்த சுற்றுலாப் பயணிகளும் வால்பாறையில் உள்ள சுற்றுலா கைடுகளும் யானை இருக்கும் இடத்தை அறிந்து ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று புகைப்படம் எடுக்கவும் செல்பி எடுக்கவும் செல்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததன் காரணமாக சுற்றுலா பயணிகளை தடுக்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனவிலங்கு - மனித மோதலை தடுப்பதற்கு வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...