காலாண்டு தேர்வே முடிந்துவிட்டது. இன்னும் அரசு வழங்க வேண்டிய கல்வி உபகரணங்கள் வழங்கப்படவில்லை - மாணவர்கள், பெற்றோர் கோவை ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு இம்மிடிபாளையத்தியை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள், அரசு வழங்க வேண்டிய இலவச புத்தக பைகள் உட்பட கல்வி உபகரணங்கள் என்னும் வழங்கப்படவில்லை என்று பதாகைகளை ஏந்தி வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: தமிழகம் முழுவதும் பள்ளிகள் கடந்த ஜூன் மாதமே தொடங்கிவிட்ட நிலையில், காலாண்டு தேர்வும் முடிந்து விட்டது. இந்த நிலையில், தற்போது, வரைபுத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் இன்னும் வழங்கபடவில்லை எனக் கூறிமாணவ மாணவிகள் அவர்களது பெற்றோருடன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு இம்மிடிபாளையத்தியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் அரசு வழங்கவேண்டிய இலவச புத்தக பைகளை இன்னும் வழங்கவில்லை என்ற பதாகைகளை ஏந்தி வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் கிணத்துக்கடவு இம்மிடிபாளையம் அரசு பள்ளியில் தற்போது காலாண்டு தேர்வு கூட முடிந்துவிட்ட சூழலில், இன்னும் புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்டவை இல்லாததால் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருவதாக30க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மாணவ மாணவிகளும்கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அரசு வழங்க வேண்டிய கல்வி உபகரணங்கள் இல்லாமல் மாணவர்கள் சந்தித்து வரும்இன்னல்களை குறித்து, பலமுறை பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வி இயக்ககம், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.

எனவே, அரசு உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் அடுத்த கட்டமாக கிராம மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சமூக ஆர்வலர் பெரியார் மணி என்பவர் தெரிவித்தார்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...