கோவை, திருப்பூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்.

நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்கள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவேஎச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி,நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

மேலும், சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

அதன்படி, தலைநகர் சென்னையில் அதிகாலை மூன்று மணி முதல் கன மழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், சென்னை முழுவதும் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழிகளிலும் மழை நீர் தேங்கி, பணிகளை விரைவாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், ஈரோடு, சத்தியமங்கலம், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் ஆங்காங்கே அதிக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்டம் கோபியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...